பவுஞ்சூர் அருகே அதிமுக வேட்பாளர் இராஜசேகர் அறிமுக கூட்டம்


கல்பாக்கம், ஏப். 1
தமிழக சட்ட மன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதி (தனி) அ.தி.மு.க வேட்பாளராக பெரும்பாக்கம் எ இராஜசேகர் போட்டியிடுகிறார். நேற்று 31 ஆம் தேதி பவுஞ்சூர் அருகே சுபம் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது

இதில் மாவட்ட அவைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ம.தனபால் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆனூர் வி. பக்வச்சலம், கவிஞர் கா. கலியபெருமாள் ஒன்றிய செயலாளர்கள் கே.வேலு, ஓஎம்ஆர் சுரேஷ் ஏ. விசயரங்கன் மற்றும் கூட்டணி கட்சிகளான புரட்சி பாரதம் மாநில துணை பொதுச் செயலாளர் கே.பி சகாதேவன், மற்றும் பாரதிய ஜனதா, த மா காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் அதிமுக வேட்பாளர் இராஜசேகர் அறிமுகம் செய்யப்பட்டார்.

மாவட்ட செயலாளர் எஸ் ஆறுமுகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ம தனபால் ஆகியோர் பேசும் போது, இந்த தேர்தலில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இராஜசேகர் வெற்றி பெற அனைவரும் உற்சாகத்துடன் உழைக்க வேண்டும் என்றனர் முன்னதாக வேட்பாளருக்கு பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *