தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், ஏப்- 1. டெல்லி, அருகில் உள்ள குருகிராம் என்ற மாவட்டத்தில் அகில இந்திய காவல் துறை அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டிகள் கடந்த மார்ச் 22 முதல் 30 வரை 8- நாட்களில் மூன்று வகையான துப்பாக்கி பிரிவில் VIP பாதுகாப்பு துப்பாக்கி ரகமான MP-5 துப்பாக்கி சுடுதல் பிரிவில் தஞ்சை தாலுக்கா துலுக்கன் பட்டி கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் லலிதா இவர்களின் மகன் ஆய்வாளர் K.சிவக்குமார் தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கும் , தஞ்சை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார், வெற்றி பெற்ற வீரர்கள் அனைவருக்கும் மத்திய காவல் துறை தலைவர் G.P. சிங் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந்திய அளவில் தங்க பதக்கமும், கோப்பையும் இரண்டாவது முறையாக பெற்று இந்திய அளவில் சேம்பியன் பட்டத்தை தக்கவைத்து கொண்டுள்ளார். தமிழ்நாட்டிற்கும் தஞ்சாவூர் மாவட்த்திற்கும் பெருமை சேர்த்த மண்ணின் மைந்தரை கிராம மக்களும் சக பணியாளர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தும் பாராட்டியும் வருகின்றனர்.