தாராபுரம் செய்திகளை பிரபு
செல்:9715328420

அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தாராபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிமனை அலுவலக பூமி பூஜைதுவமான நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித் தொகுதியில் அஇஅதிமுக கழக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆலோசனையின்படி, அதிமுக தலைமை கழக செயலாளர் எஸ்.பி.வேலுமணியின் அறிவுறுத்தலின்படி, இன்று காலை 11 மணி அளவில் தாராபுரம் அமராவதி சிலை அருகே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தாராபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிமனை அலுவலக பூமி பூஜை நடைபெற்றது.

இதில் அதிமுக மாவட்ட இணை செயலாளர் திருமதி.சத்தியபாமா தலைமையில், திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் – மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன் முன்னிலையிலும், நகர செயலாளர் ராஜேந்திரன், நகர துணைச் செயலாளர் நாட்ராயன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், பாலகுமாரன், செந்தில் குமார், செல்வகுமார்,மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் பங்கு மகேஷ், இளைஞர் பாசறை, மகளிர் அணியினர், தகவல் தொழில்நுட்பு பிரிவினர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த பாஜக, பாமக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் 300க்கும் மேற்பட்டவர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *