தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420


அதிமுக சார்பில் தாராபுரம் சட்டமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமா அறிமுக கூட்டத்தில் எதிர்க்கட்சி கோடறா எஸ்.பி வேலுமணி பேச்சு.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் மற்றும் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு ஒன்றிய குழு தலைவருமான சத்தியபாமா அதிமுக சார்பில் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளரை கழக நிலை செயலாளர். மற்றும் மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி , உடுமலை ராதாகிருஷ்ணன், கே வி ராமலிங்கம் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவை அறிமுகம் செய்து வைத்து தாராபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுகவின் வெற்றி தமிழகத்தின் நாளைய வெற்றி அம்மாவின் ஆட்சி காலத்தில் மற்றும் எடப்பாடி ஆரின் ஆட்சி காலத்தில் தமிழகம் தலை நிமிர்ந்து நின்றது தற்போது கஞ்சா மற்றும் குற்ற சம்பவங்களில் தமிழகம் தலைவிரித்து ஆடுகிறது என்று பொதுமக்கள் வேதனை அடைகின்றனர்

என்றும் நியாய விலை கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி அதிமுக ஆட்சி காலத்தில் கிடைத்து வந்ததே மலிவு விலையில் கிடைத்து வந்த பொருட்களை தற்போது விலை உயரச் செய்து பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்

எனவும் இவ்வகையை மீண்டும் சரி செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் அதிமுக ஆட்சி மீண்டும் வந்தால் மட்டுமே முடியும் எனவும் கூறி மேலும் மத்திய அரசினால் நமக்கு கிடைக்க வேண்டிய பெட்ரோல் டீசல் கேஸ் துரிதமாக கிடைத்து வருகிறது மேலும் டீசல் கேஸ் தட்டுப்பாட்டை போக்க 3 கண்டனர் கப்பல்களில் கேஸ் டீசல் பெட்ரோல் வந்து கொண்டு உள்ளது என்றும் தெரிவித்தார்

மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை என்று கூறிக்கொண்டு திமுக கபட நாடகம் ஆடி வருகிறது என்றும் தெரிவித்தார் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு எஸ் பி வேலுமணி தாராபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து வாக்குகளை சேகரித்தும் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தார்

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுச்சாமி நகர கழகச் செயலாளர் சி ராஜேந்திரன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சின்னப்பன் என்கின்ற பழனிச்சாமி என கட்சி நிர்வாகிகள் மற்றும் தாராபுரம் முன்னாள் இந்நாள் நகராட்சி உறுப்பினர்கள் ஒன்றிய கழகச் செயலாளர்கள் பாரதிய ஜனதா கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *