தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம்
தாராபுரம்- காங்கேயம் சாலை நொச்சிப்பாளையம் பிரிவு அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் இந்திரா தலைமையில் உதவிய ஆய்வாளர் லோகநாதன் முன்னிலையில் அமலாக பிரிவு போலீசார் வாகன சோதனைகள் ஈடுபட்டனர்.
அப்போது தாராபுரம்-காங்கேயம் சாலை நொச்சிப்பாளையம்
பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு வடமாநில நபர்களை சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த மதுவிலக்காமல் பிரிவு போலீசார் சந்தேகம் அடைந்த நபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த 10- கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கிசான் குமார் டிகால் வயது 23 என்பது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தீனா நாத் நாயக் வயது 24. இவர்கள் இருவரும் நண்பர்கள். அவர்களிடம் இருந்து 10-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
மேலும் இவர்கள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி கோவை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.