கடலூர் மாவட்டம் வடக்குபாளையம் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் புனித வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 3ம் ஆண்டு இரத்ததான முகாம் புனித கார்லஸ் அக்குதீஸ் இளையோர் இயக்கம் சார்பில் நடைபெற்றது
இரத்ததான முகாமை மறைவட்ட அதிபரும் பங்குதந்தை அகஸ்தின் அடிகள் உதவி பங்கு தந்தை திரு வாலேட் ஆகியோர் தலைமையில் அரசு மாவட்ட மருத்துவக்கல்லூரி ராஜா முத்தயா மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்குபெற்று முகாமை சிறப்புடன் நடத்தினர்
இரத்ததான முகாமினை கார்லஸ் அக்குதீஸ் இளையோர் இயக்கத்தின் மறைமாவட்ட இளைஞர் அணி தலைவர் ஜஸ்டஸ் இம்மானுவேல் மறை வட்ட இளைஞர் அணி செயல் அலுவலர் கோபி மற்றும் இளைஞர்கள் ஆகியோர் முன்னின்று நடத்தினர்
அ. திருநாவுக்கரசு
செய்தியாளர்