தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

அதிமுகவின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டனியில், அதிமுக வேட்பாளர் சத்தியபாமா பொன்னாபுரம் கிராமத்தில் முதல் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் கிராமத்தில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதன் திருக்கோயிலில், அதிமுக வெற்றி வேட்பாளர் சத்தியபாமா சாமி தரிசனம் பெற்று, பின்னர் தனது முதல் பிரச்சாரத்தை மாவட்ட பொருளாளர் சின்னப்பன் (எ) பழனிச்சாமி தலைமை வைத்து துவக்கி வைத்தார், இதில் ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், பாலகுமாரன், செல்வகுமார், சோமசுந்தரம், மாவட்ட மகளிர் அணியினர் ரேவதி, பானுமதி கருணாகரன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த பாமக-பாஜக-அமமுக-தமாக-தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்- உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் மேலும் வீடு வீடாக சென்று அதிமுக சாதனையை குறித்து விளக்கமாகவும் துண்டு பிரச்சாரங்களை வழங்கி தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *