அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் வி.வெங்கடேசன் அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் அவரை அறிமுகப்படுத்தும் விதமாக பம்மல் தெற்கு பகுதி கழகச் செயலாளர் பா.அப்பு (எ) வெங்கடேசன் தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது


இதில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து அவர்கள் கலந்து கொண்டு வேட்பாளரை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி பேசினார்.
இதில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் என்னென்ன மக்கள் பிரச்சனைகள் அடிப்படைத் தேவைகள் இருக்கிறதோ அதை அனைத்தையும் எங்களது வேட்பாளர் செய்து தருவார் அதற்கு நான் உத்தரவாதம் எனவும் அதேபோல் இவர் வெளியூர் நபர் அல்ல இதே ஊரைச் சேர்ந்தவர் தான் இவர் எப்பொழுதும் அணுகலாம் என்று கூறி நிர்வாகிகளிடம் பேசினார் .


பின்னர் செய்தியாளரிடம் சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து சென்றார் இந்நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகி ஆனந்த் முருகன் மற்றும் அதிமுக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பம்மல் தெற்கு பகுதி வட்டக் கழக செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள் பெண்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *