C K RAJAN Cuddalore District Reporter
9488471235..
கடலூர் மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்
கடலூர் நகர அரங்கம் அருகில் 2026-சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரச்சுரங்களை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ன தெரிவித்ததாவது,
2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.04.2026 அன்று நடைபெறவுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றல், விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம், சுயபுகைப்பட பதாகை, துண்டு பிரசுரங்கள் வழங்குதல், கிராமிய கலைநிகழ்ச்சிகள் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
151-திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 3254, 152-விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் 2230, 153- நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் 1909, 154- பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் 2702, 155- கடலூர் சட்டமன்ற தொகுதியில் 1407, 156-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் 2816, 157-புவனகிரி சட்டமன்ற தொகுதியில் 2055, 158 –சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் 1588, 159-காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் 2392 என 9 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 20,353 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 40%க்கு மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது விருப்பத்தின் பேரில் வீட்டிலிருந்தபடியே அஞ்சல் வாக்குகளை செலுத்துவதற்கான நடவடிக்கைகளும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் நேரடியாக வந்து வாக்கு செலுத்தும் வகையில் வாக்குச்சாவடி மையங்களில் சாய்தளம், சக்கர நாற்காலி வசதிகள், போதிய தன்னார்வலர்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.
மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில் வாக்கு செலுத்துவது ஒவ்வொருவரின் கடமை, உங்கள் வாக்கு சமூக மாற்றத்தின் விதை,நம் வாக்கு நமது உரிமை,என் வாக்கு என் கடமை போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன பேரணி தொடங்கிவைக்கப்பட்டது. இவ்வாகன பேரணி கடலூர் நகர அரங்கம் முதல் உழவர் சந்தை வரை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.
வாக்காளர்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் எவ்வித அச்சுறுத்தலின்றி வாக்களிப்பதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வாக்காளர்கள் அனைவரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தனது வாக்கினை பதிவுசெய்து ஜனநாயக கடமையினை நிலைநாட்டிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியல் மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணிய கோட்டி,கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலசுந்தரம், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் மகேஷ், மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.