தவெக சார்பில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் வழக்கறிஞர் கே.எஸ்.ஶ்ரீ கிரி பிரசாத் தனது வேட்புமனுவை கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.அப்போது கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தையிலிருந்து செண்டை மேளம் முழங்க கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சி நடத்தி ஊர்வலமாக வந்தது பொதுமக்களிடம் கவனம்பெற்றது.
தொடர்ந்து பேசிய அவர்,
வழக்கறிஞராக மக்கள் பணி செய்த எனக்கு இனி அரசியல் களத்தில் இறங்கி மக்கள் பணி செய்ய தவெகவில் வாய்ப்பு கிடைத்துள்ளது எனவும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளுக்கு கிடைக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர்,தவெகவுக்கு -திமுகவுக்கும் தான் போட்டி என்றும் இளைஞர்களின் எழுச்சியால் தவெக தலைவர் விஜய் முதல்வர் ஆவது உறுதி எனவும் அவர் தெரிவித்தார்.