துறையூர் சட்டமன்ற தொகுதி (தனி) தவெக வேட்பாளர் ரவிசங்கர் வேட்பு மனு தாக்கல்
துறையூர் ஏப்-04
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ரவிசங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் அலுவலர் மணிமாறனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.துண தேர்தல் அலுவலர் வட்டாட்சியர் சிவகுமார், தேர்தல் வட்டாட்சியர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் துறையூர் தொகுதியில் தவெக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன் தலைமையில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரவிசங்கர் மற்றும் கழக நிர்வாகிகள் துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து விசில் அடித்து ஆரவாரத்துடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மண்ணச்சநல்லூரை சேர்ந்த இவர் திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். இந்நிகழ்வில் மாவட்ட இணைச் செயலாளர் மதன், துறையூர் தெற்கு நகர செயலாளர் வினோத், வடக்கு நகர செயலாளர் சூர்யா, வழக்கறிஞர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எழிலரசி மற்றும் வழக்கறிஞர் பாக்யராஜ், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர். கார்த்திகேயன் மற்றும் தாளகா நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் ஏராளமான கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்