தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தமிழ் பேரரசு கட்சி சார்பில் வழக்கறிஞர் சரவணன் போட்டியிடுகிறார். அவர் இன்று கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு அங்கிருந்து ஊர்வலமாக கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் சார் ஆட்சியர் ஹிமான்ஷுமங்களிடம் தாக்கல் செய்தார்