தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் (தனி) தொகுதி: தவெக வேட்பாளர் கௌரி சித்ரா வேட்பு மனு தாக்கல்.

தாராபுரம் தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கௌரி சித்ரா, ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து, வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் அலுவலரான பெலிக்ஸ் ராஜா அவர்களிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேவேந்திரர் தெருவைச் சேர்ந்த முருகேசன் அவர்களின் மனைவியான கௌரி சித்ரா, கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக) நகர மகளிர் அணி செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். முந்தைய தேர்தல்களில் இருமுறை அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும், தாராபுரம் தொகுதிக்கான சீட் அவருக்கு வழங்கப்படவில்லை. இம்முறையும் அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், தாராபுரத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், வேட்பாளர் அறிவிப்பின் மறுநாளே அவர் அதிமுகவில் இருந்து விலகினார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை சென்று தவெக கட்சியில் இணைந்த கௌரி சித்ரா, இணைந்த மறுநாளே தாராபுரம் தொகுதிக்கான தவெக வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளில், தாராபுரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள தேர்தல் பணிமனையிலிருந்து அமராவதி சிலை வரை ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்தார். பின்னர், தேர்தல் விதிமுறைகளின்படி நான்கு பேர் மட்டுமே அலுவலகத்திற்குள் சென்று, வருவாய் கோட்டாட்சியரும் தேர்தல் அலுவலருமான பெலிக்ஸ் ராஜா அவர்களிடம் வேட்பு மனுவை சமர்ப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *