கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 2026 ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.
பி.எஸ்.ஜி. ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி சேர்பெர்சன் நந்தினி ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் செயலர் யசோதா ,இயக்குனர் சதாசிவம் மற்றும் முதல்வர் ஹாரத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்…
முன்னதாக நடைபெற்ற விழாவில் குஜராத்தில் உள்ள பண்டிட் தீனதயாள் எரிசக்தி பல்கலைக்கழகத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் சுந்தர் மனோகரன், முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கான காலை அமர்வுக்குத் தலைமை தாங்கி பட்டங்கள் வழங்கி பேசினார் அப்போது பேசிய அவர்,பட்டப்படிப்புகளை முடித்து செல்லும் மாணவிகள் வாழ்வில் சவால்களை எதிர் கொள்வதில் துணிச்சலுடன் அதே நேரத்தில் தகுந்த பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்…
தொடர்ந்து இரண்டாவது அமர்வாக நடைபெற்ற விழாவில்,இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் விஞ்ஞானி ‘ மற்றும் மூத்த இயக்குநரான டாக்டர் ரஞ்சித் கிருஷ்ண பாய்,அடிப்படை அறிவியல், சமூக அறிவியல், மானுடவியல் மற்றும் பி.வோக். பட்டப்படிப்பு மாணவர்களிடையே பட்டங்கள் வழங்கி உரை நிகழ்த்தினார்..
அப்போது பேசிய அவர்,கல்வி முடித்து செல்லும் மாணவிகள் தாங்கள் பெற்ற கல்வி அறிவை தங்களது வாழ்வியல் முன்னேற்றங்களுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்…
பல்வேறு அமர்வுகளாக நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இளங்கலை,முதுகலை முடித்த 3213 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன விழாவில் கல்லூரி துறை தலைவர்கள்,பேராசிரியர்கள், பெற்றோர்கள் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்…