கும்பகோணம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ. கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் திங்கட்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கும்பகோணம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ.சாக்கோட்டை,மலையப்பநல்லூர்,
சீனிவாசநல்லூர்,திருநாகேஸ்வரம் ஆகிய கிராமங்களில், பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.”அப்போது, கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக அரசின் நடவடிக்கைகள் குறித்தும், திமுக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படவுள்ள நலத் திட்டங்கள் குறித்தும் எடுத்துக் கூறி, பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறை வேற்றப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்”
இதில், திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்