கோயம்புத்தூர் வெள்ளலூர் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் இரவு பாடசாலை, 6-வது வார்டு ஊர் பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் SPM அசோசியேட்ஸ் இணைந்து 135-வது டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஜெயந்தி விழாவை வெகுவிமரிசையாகக் கொண்டாடினர்.


​வெள்ளலூர் வள்ளலார் காலனியில் உள்ள சித்தி விநாயகர் கோவில் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், அரசியலமைப்புச் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்குச் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.


​இந்த அன்னதான நிகழ்வை பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்,இந்த நிகழ்வில் பல் சமய நல்லுறவு இயக்க இணை ஒருங்கிணைப்பாளர் அபுதாஹிர் மாவட்டத் தலைவர் இஸ்மாயில்,
நிர்வாகிகள் அசாருதீன் பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்

மேலும் இந்த நிகழ்வில் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.​அம்பேத்கரின் கொள்கைகளைப் பரப்பும் வகையிலும், சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும் நடைபெற்ற இந்த விழாவில், இரவு பாடசாலை மாணவர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *