வாக்குச்சாவடி அருகில் வேட்பாளர் பெயர் கல்வெட்டு.
தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்த உடன் 72 மணி நேரத்துக்குள் பெயர் பலகைகளை மறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் 30 நாட்களுக்கு மேலாகியும் அதுவும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க கூடிய வாக்குச்சாவடிக்கு அருகிலேயே வேட்பாளரின் பெயர் கல்வெட்டு தொடர்ந்து உள்ளது
இதில் வேடிக்கென்ன வென்றால் வாக்குச்சாவடி வாசல் அருகிலேயே வேட்பாளர் பெயர் கொண்ட கல்வெட்டு உள்ளது இன்று வரை அந்த கல்வெட்டை மறைக்கவில்லை ஏனென்று தெரியவில்லை அதன் வழியாகத்தான் அதிகாரிகள் தொடர்ந்து சென்று வந்து கொண்டிருக்கின்றனர் எதற்காக இன்னும் மறைக்காமல் வைத்திருக்கிறார்கள்
என்று தெரியவில்லை ஆகையால் உடனடியாக இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கையாகவே உள்ளது இது தொடர்பாக சமூக ஆர்வலரும் வழக்கறிஞர் ஒருவர் தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு இது தொடர்பாக புகார் அனுப்பப்பட்டுள்ளார்.