தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் 9940337853
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 136-வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ வெண்கல சிலைக்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன் மாலை அணிவித்து, திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
உடன் முன்னாள் அமைச்சர் டி கே எம் சின்னையா, தாம்பரம் மத்திய பகுதி கழகச் செயலாளர் எல்.ஆர்.செழியன், தாம்பரம் கிழக்கு பகுதி செயலாளர் எம்.கூத்தன் தாம்பரம் மேற்கு பகுதி கழக செயலாளர் ஏ.கோபிநாதன் மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திக் மனோகரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பிற அணிச்செயலாளர்கள் , வட்டக் கழக செயலாளர்கள் மகளிர் அணி சேர்ந்த நிர்வாகிகள் மாணவரணி நிர்வாகிகள் இளைஞர் இளம்பெண் பாசறை நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.