திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த 65 வயது ராஜேந்திர பிரசாத் நேற்று (ஏப்ரல் 14) தஞ்சாவூர் சாலையில் நடந்து சென்றபோது, நான்கு மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 1500 ரூபாய் ரொக்கத்தைப் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 17 வயதுடைய இரண்டு சிறுவர்களைக் கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய இருவரைத் தேடி வருகின்றனர்.
மண்னை
க.மாரிமுத்து.