தி.மு.க. ஊழல் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டும் அரசு ஊழியர் களை என்றும். எல்லா வகையிலும் பாதுகாப்பது அ.தி.மு.க.தான் எனவும் மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அ.தி.மு.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பா ளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் சாலை மார்க்கமாக மதுரை மாவட் டம் உசிலம்பட்டி பகுதியில் மக்களை சந்தித்து பேசினார். பின்னர் திருமங்கலம் தொகு திக்கு உட்பட்ட செக்கானூரணி யில் அரசு போக்கு வரத்துக்கழக பணிமனை முதல் புளியங்குளம் வரை வாகனத்தில் நகர்வலம் வந்தார். அப்போது அவருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மேளதாளம் முழங்க, கிராம கலை நிகழ்ச் சியுடன் வரவேற்பு கொடுக் கப்பட்டது. பெண்கள் பூரண கும்ப மரியாதை செய்தும், வழி நெடுகில் பூக்களை தூவி யும் வரவேற்றனர்.
தொடர்ந்து அவர் விராட்டிபத்து, காளவாசல் வழியாக பழங்காநத்தம் பகுதியை வந்தடைந்தபோது, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அதன்படி மதுரை அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களான செல்லூர்ராஜூ (மதுரை மேற்கு), ஆர்.பி.உதய குமார் (திருமங்கலம்), ராஜன் செல்லப்பா (திருப்பரங்குன்றம்), டாக்டர் சரவணன் (மதுரை வடக்கு), மகேந்திரன் (உசிலம்பட்டி), புதிய நீதிக்கட்சி வேட்பாளர் நடிகர் சுந்தர்.சி. (மத்திய தொகுதி), பா.ஜனதா வேட்பாளர் ராம சீனிவாசன் (மதுரை தெற்கு), மாணிக்கம் (சோழவந்தான்) உள்பட 10 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.