தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தில் விவசாயிகள் சங்கம் கூட்டம்: திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணிக்கு முழு ஆதரவு. தெரிவித்து திமுக தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை விவசாய சங்கத்தினர் விவசாயிகளுக்கு வழங்கி பிரச்சாரத்தை தொடங்கினர்.

தாராபுரம், திருப்பூர் மாவட்டம்:
குமரகுரு ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம், சங்கத் தலைவர் காளிமுத்து தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணிக்கு ஒருமனதாக ஆதரவு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பேசிய விவசாயிகள், கடந்த 2021 ஆம் ஆண்டு தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில், குறிப்பாக விவசாயிகளுக்கான வாக்குறுதிகள் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், வரவிருக்கும் தேர்தலில் டாக்டர் இந்திராணி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும், விவசாயிகளின் வாக்குகள் அனைத்தும் உதயசூரியன் சின்னத்திற்கே விழும் என்றும் கூறினர்.

இதனை தொடர்ந்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் ரத்தினம் பேசுகையில், விவசாயிகள் யாரும் எதிர்பார்க்காத இலவச மின்சாரம் திட்டத்தை மறைந்த முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அறிமுகப்படுத்தியதை நினைவுபடுத்தினார். மேலும், கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் இருந்த ரூ.7,300 கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து, விவசாயிகளை கடனின்றி வாழ வைத்தவர் அவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு:

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் திமுகவிற்கு முழு ஆதரவு வழங்கும். தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணிக்கு ஆதரவு அளிக்கப்படும்.

தாராபுரம் பகுதியில் உள்ள உப்பாறு அணைக்கு, PAP தொகுப்பு அணைகள் அல்லது அமராவதி அணையிலிருந்து உபரி நீர் கொண்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

விவசாயிகளின் பயிர் கடன் மற்றும் நகைக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தட்கல் முறையில் விண்ணப்பித்து பணம் செலுத்தியவர்களுக்கு உடனடியாக விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும்.

மேலும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராமப்புற சாலைகளை விரைந்து சீரமைத்து தரமான தார்சாலைகள் அமைக்க வேண்டும்.
கோழிப்பண்ணை விவசாயிகளுக்கான கறிக்கோழி வளர்ப்பு விலையை உயர்த்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

கொளத்துப்பாளையம் பகுதியில் சிப்காட் தொழிற்சாலை வளாகம் அமைக்கக்கூடாது என உறுதி ஆணை வழங்க வேண்டும்.அரசு கொள்முதல் நிலையங்களில் மக்காச்சோளத்தை மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலை கிலோ ரூ.23க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து வேட்பாளர் இந்திராணியுடன் கட்சி சார்பற்ற விவசாய சங்க மாநிலத் தலைவர் காளிமுத்து துண்டு பிரசுரங்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி திமுக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *