தமிழ்நாடு நதிகள், மலைகளை உயிரியல் மண்டலங்களாக்க நடைபயணம்!

திருச்சிக்கு வருகை புரிந்தவருக்கு வாழ்த்து தெரிவித்த திருச்சி சமூக செயற்பாட்டாளர்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் வள்ளுவர் புரத்தை சேர்ந்த விக்ரமாதிதன்
தமிழ்நாட்டில் உள்ள காவேரி, வைகை, நொய்யல், தாமிரபரணி, பாலாறு, பவானி, பழனி, நீலகிரி உள்ளிட்ட நதி மற்றும் மலைகளை உயிரியல் மண்டலங்கள் அறிவிக்கக்கோரி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 6500 கி.மீ.விழிப்புணர்வு நடைப்பயணம் செல்ல முயற்சி மேற்கொண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு வருகை புரிந்தார் மின் மற்றும் மின்னணுவியல் பிரிவில் இளங்கலைப் பொறியியல் பயின்ற விக்ரமாதிதன்.
வருகை புரிந்த விக்ரமாதிதனை திருச்சி வளர்ச்சி குழும நிறுவனர் வழக்கறிஞர் திலீப் வரவேற்றார். திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசன தலைவர் முகமது ஷபி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், அருவி முதியோர் இல்லம் சையது தாஹா, எழுத்தாளர் சதாசிவம்,அபிராமி டாக்ஸி ஸ்டாண்ட் ஸ்ரீதர், மணி, பிரிட்டோ, கார்த்திக் உட்பட பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் வரவேற்று அவரது முயற்சிக்கு வாழ்த்து கூறினர்.


நடை பயணம் குறித்துவிக்ரமாதிதன் பேசுகையில்,
இயற்கையை, குறிப்பாக ஆறுகளையும் மலைகளையும் வெறும் வளங்களாகக் கருதாமல், உயிருள்ள கூறுகளாகக் கருதி அவற்றுக்குச் சட்டப்பூர்வ உரிமைகளை வழங்குவதை ஆதரிக்க வேண்டும். இது இந்தியாவில் நிலவும் தற்போதைய சுற்றுச்சூழல் சீரழிவின் நிலையை விவரிப்பதோடு, சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான ஒரு சட்டக் கட்டமைப்பையும் முன்மொழிய வழிவகுக்கும். மனித அல்லது பெருநிறுவன உரிமைகளைப் போலவே, ஆறுகளையும் மலைகளையும் மாசுபடாமல் இருக்கவும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை விழிப்புணர்வு நடைபயணத்தை மேற்கொள்கிறேன். ஒரு நாளிற்கு சராசரியாக 30 கி.மீ நடக்கிறேன். ஆற்றை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.இது இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்கு நீர் பாதுகாப்பு, சூழலியல் சமநிலை, பொது சுகாதாரம் மற்றும் நீண்டகால பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யும்.எதிர்கால சந்ததியினருக்காக இயற்கை அமைப்புகளின் மீளுருவாக்கத்தையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் என்றார்.
விக்ரமாதிதன்
கிருஷ்ணகிரி மாவட்டம், வள்ளுவர்புரத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் முனிசாமி, இந்திராணி இணையரின் மகன் ஆவார். இவர்க்கு எம். விஜய் மது என்ற ஒரு சகோதரனும், வித்யா சாகரி என்ற ஒரு சகோதரியும் உள்ளனர். இவரது மனைவி தருணிகா இவரது முயற்சிக்கு ஆதரவாய் உள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *