ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினராகவும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராகவும் இருப்பவர் ஊர்வசி அமிர்தராஜ். இவர் கணேஷ் நகர் நாலாவது தெருவில் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டில் பணம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இரவு 6 மணி அளவில் கூட்டுறவு பதிவாளர் பொன்மாரி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் கணேஷ் நகரில் உள்ள சிறுவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் சோதனை செய்தனர்
அப்போது அங்கு கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது இதனை அடுத்து பறக்கும் படை அதிகாரிகள் அங்கு இருந்த 500 ரூபாய் கட்டு கட்டான நோட்டுக்களை பறிமுதல் செய்து தென்பாகம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். அங்கு வைத்து ரூபாய் நோட்டுகளை எண்ணக்கூடிய மிஷின் மூலம் 500 ரூபாய் நோட்டுகள் என்ன பட்டது அதில் 65 லட்சம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ வீட்டில் பணம் பறிமுதல் செய்யும் போது அங்கு இருந்த சுரேஷ் என்பவரை பறக்கும் படையினர் கைது செய்து தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக பறக்கும் படை அதிகாரி பொன்மாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 65 லட்சம் பணத்தை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததா? என்ற கோணத்தில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உதவி தேர்தல் அதிகாரி திருமணி ஸ்டாலின் காவல் நிலையம் வருகை தந்து பறிமுதல் செய்யப்பட்ட 65 லட்சம் ரூபாய் பணத்தை பார்வையிட்டார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் 65 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது மேலும் அவரது வீட்டில் இருந்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் தற்போது மீண்டும் சிறுவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தற்போது எம்எல்ஏ ஆக இருக்கும் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் 65 லட்சம் ரூபாய் பறிமுதல் பறக்கும் படையினரால் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது