கும்பகோணம் திருவிடைமருதூர் பாபநாசம் ஆகிய மூன்று தொகுதியில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்குப்பதிவு.

தமிழக சட்டமன்ற தேர்தலை
முன்னிட்டு அரசியல் கட்சிகள் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய மூன்று தொகுதியில் 40 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிிலையில் 7.67 லட்சம் வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் நிலையில் உள்ளனர்.

வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய இன்று காலை 7 மணி அளவில் வாக்கு சாவடியில் நீண்ட வரிசையில் நின்று வாக்கு பதிவுகளை ஆர்வமாக செலுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து முக்கிய கட்சிகளின் சார்பில் பல்வேறு வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.திருவிடைமருதூர் தொகுதியில் மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் அமைச்சர் கோவி செழியன், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ இளமதி சுப்பிரமணியன்,நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யபாரதி, தவெக சார்பில் பிரபாகரன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புரட்சிமணி உள்ளிட்ட 14 பேர் போட்டியிடுகின்றனர்.வாக்கு பதிவு இயந்திரத்தில் 15-வது இடத்தில் ‘நோட்டா’ இடம்பெற்றுள்ளது.

திருவிடைமருதூர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,56,930 ஆகும்.இதில் ஆண் வாக்காளர்கள் 1,26,222 பேரும்,பெண் வாக்காளர்கள் 1,30,700 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 8 பேரும் அடங்குவர்.மொத்தம் 326 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திமுக சார்பில் அன்பழகன், த.மா.க சார்பில் அசோக் குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆனந்த், த.வெ.க சார்பில் வினோத்,(பாமக) ராமதாஸ் அணியிலிருந்து ம.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
இந்தத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,23,507, பெண் வாக்காளர்கள் 1,30,796 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 15 பேர் என மொத்தம் 2,54,318 வாக்காளர்கள் உள்ளனர்.

இதுபோல் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் ஏ.எம்.ஷாஜகான் (ஐயுஎம்எல்), சண்முகபிரபு (அஇஅதிமுக),அசாருதீன் (த.வெ.க) அனீஸ் பாத்திமா (நாதக) உள்ளிட்டோர் 13 பேர் போட்டியிடுவதால் பலமுனைப் போட்டி நிலவுகிறது.மேலும் பல சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

இந்தத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,56,518 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 1,24,740 பேரும், பெண் வாக்காளர்கள் 1,31,755 பேரும், மூன்றாம்
பாலினத்தவர் 23 பேரும் உள்ளனர்.

இதனையடுத்து களத்தில் உள்ள வேட்பாளர்கள் அமைச்சர் கோவி. செழியன் சோழபுரம் அரசு மேல்
நிலைப்பள்ளியிலும், எம்.எல்.ஏ
அன்பழகன் சாக்கோட்டை தொடக்கப் பள்ளியிலும்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷாஜஹான் ஆடுதுறை கிருஷ்ணன் கோயில் தொடக்கப்பள்ளியிலும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

வாக்குச்சாவடியில் காலை முதலே முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதல்முறை வாக்காளர்கள் என ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.மேலும் எந்த
தேர்தலிலும் இல்லாதவாறு வாக்காளர்கள் தங்களது அலைபேசி
களை அனைத்து னவத்து விட்டு ஒப்புகை சீட்டு பெற்றுக்கொண்டனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள்
செய்யப்பட்டிருந்தன.அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

வாக்காளர்களின் ஆதரவைப் பெற அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி இருப்பதால்
கும்பகோணம்,திருவிடைமருதூர்,பாபநாசம் தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என வாக்களித்தவர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *