திமுக…தவெக மோதல் வாக்குவாதம்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 42 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில் தாமோதரன் நகர் மெயின் ரோட்டில் திமுக சார்பில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கோட்டு ராஜா தலைமையில் திமுகவினர் நின்று பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்துக் கொண்டிருந்தனர் அப்போது தமிழக வெற்றி கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் எஸ் டி ஆர் சாமுவேல்ராஜ் தலைமையில் கிஷோர். கோல்டன் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் காரில் வந்தனர் அப்போது அங்கு ஒருவர் பணத்துடன் நின்று கொண்டிருந்தார்
அப்போது அந்த நபரிடம் தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்ட செயலாளர் சாமுவேல் ராஜ் பணம் ஏது என்று கூறி பணத்தை பிடுங்க முயற்சி செய்தார். அதற்கு அந்த நபர் நான் வியாபாரி என்று கூறினார் வியாபாரி என்றால் இவ்வளவு பணம் இருக்க என்று அவர் தொடர்ந்து வாக்குவாதம் செய்தபோது திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழக வெற்றி கழகத்தினர் இது வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்த பணம் என்று கூறினார் அதற்கு திமுகவினர் அது ஒரு வியாபாரத்துக்குள்ள பணம் என்று கூறி அங்கு வாக்குவாதம் ஈடுபட்டது மோதல் முற்றியது சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. திமுகவின் அருந் தமிழக வெற்றி கழகத்தினரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்தனர் வந்து இரு தரப்பினர் கலைந்து செல்ல கூறினார்