நாகப்பட்டினம்,ஜூலை
நாகை மாவட்டம் திருமருகல் சந்தை பேட்டை கடைத்தெருவில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் உயர் மட்ட பயணியர் நிழலகம் அமைக்கும் பணிக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டுப்பட்டது.
அடிக்கல் நாட்டப்பட்டு 10 மாதங்களை கடந்தும் போதிய இடவசதி இன்றி பணிகள் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவகர், ஹரிகிருஷ்ணன் தலைமையில் ஒன்றிய பொறியாளர் செந்தில், வருவாய் ஆய்வாளர் பிரியதர்ஷினி, நில அளவையர் பாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் அன்பரசி உள்ளிட்டோர் உயர்மட்ட பயணிகள் நிழலகம் அமைக்கும் இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர். மேலும் கட்டுமான பணிகளுக்கு இடையூறாக உள்ள கடைகளை தாமாக அகற்றிக் கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.
இதில் வருவாய் துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் உடன் இருந்தனர்.