நாகப்பட்டினம்,ஜூலை.22-நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 65 ஆவது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஈத் ஜிம்மை ரஹிமா, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் நர்கீஸ் பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பூங்குழலி வரவேற்றார்.

இதில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முகமது சுல்தான், அப்துல் பாசித், ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், பள்ளி வளர்ச்சி குழுவினர், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *