பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் சட்டமன்ற தொகுதி ராஜகிரி காசிமியா மேல்நிலைப் பள்ளியில் அதிமுக வேட்பாளர் துரை.சண்முகபிரபு தனது வாக்கினை பதிவு செய்தார் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 315 வாக்கு சாவடி மையங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியது.

பாபநாசம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் துரை.சண்முகபிரபு ராஜகிரி காசிமியா மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் துரை.சண்முகபிரபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மக்கள் எழுச்சியுடன் வாக்களித்து வருகின்றனர் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடி யார் தலைமையிலான ஆட்சி அமைப்பது உறுதி என தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *