மன்னார்குடி., ஏப்ரல்.23
தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வரிசையாக நின்று வாக்குச்சாவடியில் வாக்களித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா தனது சொந்த ஊரான தளிக்கோட்டையில் தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்தினார்.
அப்போது டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது தமிழ்நாடு டெல்லிக்கு இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழ்நாடு வெல்லும். வர வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் ஆக இருக்கும் இதுவரை பெண்களின் வாக்கு எழுச்சி கடந்த தேர்தலை விட திமுக அரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
எதிரணி இருக்கும் பெண்கள் கூட நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள் என தெரிவித்தனர். 5 ஆண்டு காலம் திமுக அரசு பெண்களுக்கு அளித்த மகத்தான திட்டங்கள் ஆழமாக தீர்க்கமாக மக்களின் மனதில் பதிந்துள்ளது.
திமுக கூட்டணி இந்த தேர்தலில் நிச்சயம் மகத்தான வெற்றி பெறும் என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் புரட்சித் தமிழர் மக்கள் முன்னேற்ற கழக சார்பில் போட்டியிடும் ராசு பிள்ளை நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் MNB ராஜா ஆகியோர் வாக்களித்தனர்.
மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் எஸ் காமராஜ் எட அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடும்பத்துடன் வாக்களித்தார்.
திருத்துறைப்பூண்டியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.மாரிமுத்து காடுவாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.