செய்தியாளர் ராஜாராம் குமார்
விழுப்புரம்: கோட்டகுப்பம்
விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டகுப்பம் கிராமத்தில் 10 மற்றும் 11 வது வார்டு கிராம மக்கள் சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
தங்களது கோரிக்கைகளான ஆதிதிராவிட மயானம் இடத்திற்கான பிரச்சனையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தும் அத தீர்ப்பை மதிக்காத நடைமுறைப்படுத்தாத மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் அரசியல்வாதிகள் யாவருக்கும் ஆதரவு இல்லை என்றும் மேலும் ஆதிதிருடன் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்காததை கண்டித்தும் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் உயர் தண்ணீர் தேக்க தொட்டி நாடக மேடை செய்து தராத மாற்ற நிர்வாகம் மற்றும் அரசியல்வாதிகளை கண்டிக்கும் வகையில் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
இதனால் கோட்டகுப்பம் பத்து மற்றும் 11ஆவது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் 2,189 வாக்காளர்களின் யாரும் வாக்கு செலுத்தவில்லை.
மேலும் வாக்கு சாவடிக்குள் எந்த கட்சி முகவர்களும் இல்லாததால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மட்டும் அமர்ந்துள்ளனர் கோட்டகுப்பம் காவல் ஆய்வாளர் விசுவநாதன் தலைமையில் 15க்கும் மேற்பட்ட போலீசார் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.