கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி அரசு கலை கல்லூரி வளாக வாக்கு சாவடியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தனது வாக்கை பதிவு செய்தார்..
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைதியான முறையில் தேர்தல் நடத்த அனைத்து வாக்கு சாவடிகளிலும் போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..
ஆறு மணிக்குள் வாக்கு மையங்களில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும்,இந்த முறை அதிக வாக்குப்பதிவுகள் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்..
முதல் முறை வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக வந்து வாக்களியுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்த அவர்,மலை வாழ் கிராமங்களில் வசிப்பவர்களும் வாக்களிக்க போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்…