திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில் காலை முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர் நூற்றுக்கணக்கோர் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருகிறார்கள் அனைத்து பூத்துகளிலும் விறுவிறுப்பாக தேர்தலில் வாக்குப்பதிவு பதிவாகி 50% மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது கடுமையான வெயில்களிலும் கால் கடுக்க நின்று இளைய தலைமுறை முதல் முதியவர் வரை தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
தாராபுரம் தனி தொகுதியில் உள்ள சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிகளில் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ராஜேந்திரன் ஆகியோர் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார்கள்.