தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வெங்கடேஷ் நகரை சேர்ந்த ரகுபதியின் மகள் சுதர்சனா என்பவருக்கும், கோவில்பட்டி அருகே உள்ள அழகப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் தியாகராஜனுக்கும் கோவில்பட்டி சௌபாக்கியா திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடைபெற்றது..
இந்நிலையில் மணப்பெண் சுதர்சனா மணமுடிந்த கையோடு மணக்கோலத்தில் கோவில்பட்டி பார்க் சாலையில் உள்ள இலக்குமிஆலை துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்.