C K RAJAN
Cuddalore District Reporter

94884 71235

கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி பி ஆதித்யா செந்தில்குமார் மாவட்டத்தில்
(1.05.2026) மே தினத்தன்று அனைத்து மதுபானக் கூடங்களிலும் மதுபானங்கள் விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டும்..

சென்னை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் கடித எண்.
P & E2(1)/129/2017, நாள்:21.04.2026 நாளிட்ட கடிதத்தில் தொழிலாளர் தினமான மே தினம்
(01.05.2026) வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டில் உள்ள FL- 1/ FL-2/ FL-3/ FL-3A/ FL-3AA மற்றும் FL- 11 உரிமம் பெற்ற, மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற அனைத்து மதுபானக்கூடங்களும் மூடி மதுபானங்கள் விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, மே தினமான (01.05.2026) வெள்ளி ஒரு நாள் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அனைத்து FL-1 மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள் மற்றும் FL-2 / FL-3 உரிமம் பெற்று இயங்கும் மனமகிழ் மன்றங்கள் மற்றும் மதுபானக் கூடங்களை மூடவும்,மேற்படி நாளில் மதுபானம்; விற்பனை மேற்கொள்தல் கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.


அரசு உத்தரவை மீறி விதிமீறலாக மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் எப்.எல்-2 மற்றும் எப்.எல்.3 உரிமதாரர்கள் மீது கடுமையான குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர்
சிபி ஆதித்யா செந்தில் குமார் எச்சரிக்கை…
.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *