திருவண்ணாமலை வேங்கிக்கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி 9384111563.
திருவண்ணாமலை
வருகின்ற 30.04.2026 இரவு 09.12 ஆரம்பித்து 01.05.2026 இரவு 10.52 வரை பௌர்ணமி உள்ளது, சித்திரை மாதத்தில் வருகின்ற பௌர்ணமியை சித்ரா பௌர்ணமியாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றார்கள் .அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மாதாமாதம் பக்தர்கள் கிரிவலம் வருவது வாடிக்கை ஆனால் கார்த்திகை தீபத்திற்கு அடுத்தபடியாக,சித்ரா பௌர்ணமி அன்று 5 லட்சத்திற்கும் மேலாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே காவல்துறையினர் வருகின்ற பக்தர்கள் சிரமம் இல்லாமல் கார் பார்க்கிங், பேருந்து நிலையம் எங்கெல்லாம் உள்ளது , என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்கள் ! அதன்படி 9487851015 இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் ஹாய் Hi என நீங்கள் மெசேஜ் அனுப்பினாலே போதும் .எங்கு கார் பார்க்கிங் உள்ளது,
எங்கு டெம்ப்ரவரி பஸ் ஸ்டாண்ட் உள்ளது என்பதை ஒரு லிங்க் மூலமாக உங்கள் WhatsApp வாட்ஸ் அப்பிற்கு அனுப்பிவிடுவார்கள். இந்த லிங்கை பயன்படுத்தி கார் பார்க்கிங் ,டெம்பரவரி பஸ் ஸ்டாண்ட் எங்கெல்லாம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். திருவண்ணாமலை டிஸ்ட்ரிக்ட் காவல்துறையினர் நிறைய வசதிகள் செய்திருக்கிறார்கள், குறிப்பா 16 பதினாறு தற்காலிக பேருந்துகள், 90 கார் பார்க்கிங் வசதியும் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி குடிநீர் வசதி, ஆங்காங்கே பாதுகாப்பிற்கான சிசிடிவி கேமராக்கள் சரி செய்து ,காவல் சேவை மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் மருத்துவ முகாம்களும் அமைத்துள்ளார்கள். பக்தர்கள் வரும்போது உங்களுடைய அடிப்படையான தேவைகளைமாத்திரை மருந்து உள்ளிட்டவையை எடுத்துக்கொண்டு தங்கம் வெள்ளி நகைகள் அணிந்து வருவதை தவிர்த்து, குழந்தைகளை கூட்டிக் கொண்டு வராமல், அப்படியே கூட்டிக் கொண்டு வந்தாலும் பாதுகாப்போடு எந்த சந்தேகங்கள் இருந்தாலும் அருகில் உள்ள காவல்களை அணுக வேண்டும் எனவும் பாதுகாப்போடு கிரிவலம் வர மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.