மாசி வீதிகளில் திரண்ட பக்தர்கள் !!
மதுரையில் சித்திரைத் திருவிழாவை யொட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நடந்தது. அலங்காரத் தேரில் எழுந்தருளி மாசி வீதிகளில் மீனாட்சியும், சொக்கநாதரும் வலம் வந்தனர். மாசி வீதிகளில் பக்தர்கள் திரண்டிருந்தனர்.
மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி மீனாட்சி அம்மன் திருத்தேரோட்டம் நடந்தது. இதற்காக தேரோட்ட ஏற்பாடுகள் நடந்தன. கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டனர்.
அங்கு அம்மனுக்கும், சுவாமிக்கும் விசேஷ ஆராதனை நடத்தப்பட்டது. இதன்பின் அலங்கரிக்கப் பட்டதேரில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் எழுந்தரு ளினார்கள். பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும். பிரியாவிடையும் சிறப்பு அலங் காரத்தில் வீற்றிருந்தனர்.
இதற்கு அடுத்த தேரில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மீனாட்சி அம்மன் எழுந்தருளினார். சிறிய தேரில் விநாயகரும், சுப்பிரமணியரும் வந்த னர். தேரோட்டம் தொடங்கும் முன் அங்குள்ள கருப் பணசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டன. தொடர்ந்துபெரிய தேர் புறப்பட்டது.
அதைத் தொடர்ந்து சிறிய தேர் புறப்பட்டது. முதலில் விநாயகரும், இரண்டாவதாக முருகனும் தொடர்ந்து நாயன்மார்களும் அமர்ந்திருந்த சப்பரங்கள் சென்றன. இதையடுத்து பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும், மற்ற தேரில் மீனாட்சியும் வந்தனர். இறுதியாக சண்டிகேஸ்வரர் சப்பரம் வந்தது. மீனாட்சிசுந்தரேஸ்வரர் வந்த தேர்களை ஆயிரக்கணக்கான பக்தர் கள் வடம் பிடித்து இழுத் தனர். தேருக்கு முன் புறமும், பின்புறமும், சாலைகளிலும் ஏராள மான பக்தர்கள் திரண்டு நின்று அம்மனையும், சுவாமியையும் தரிசித்தனர்.