கோவை பேரூர் போஸ்டல் காலனி பகுதியை சேர்ந்த சரவணகுமார் மகாலட்சுமி தம்பதியினரின் மகள்கள் ஜெனிகா ஸ்ரீ மற்றும் சுதிக்க்ஷா ஸ்ரீ ஆகியோர் சாய் புவன் நடன ஆசிரியரிடம் கிராமிய பாடல்களை கற்று வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் இயற்கை வளங்களை காப்பாற்ற வேண்டும் என்பதை மையமாக கொண்டு கோவை வளங்களை காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
கண்ணே கலைமானே பாடல் மெட்டுகளைக் கொண்டு கோவை வளங்களை காக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு வரிகளை மாற்றி இந்த பாடலை உருவாக்கி உள்ளனர். “சிறுவாணி நீர், கொங்கு தமிழ், விவசாயம்” ஆகிய சொற்களை கொண்டு இந்த பாடலை உருவாக்கியுள்ளனர்.