திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி, அத்திவாக்கம் கோட்டூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு, ஸ்ரீதேவி,பூதேவி வெங்கடேச பெருமாள் ஆலய ஜீர்ணோத்தாரன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா கிராம பெரியோர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக கணபதி பூஜை, கணபதி ஹோமம் , விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வருண ஹோமம், யாக பூஜை, நாடி சந்தனம், உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று யாகசாலையில் இருந்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரானது கலசத்தில் புறப்பட்டு ஆலய கலச கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமாளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தூப தீப ஆராதனை நடைபெற்றது.

இதில் செங்குன்றம் பால வாயல், கோட்டூர், கோமதி அம்மன் நகர் பகுதிவாழ் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சியின் முடிவில் ஆலய விழா குழு சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *