தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), பல்நோக்கு உள்விளையாட்டரங்கில் புரட்சிக் கவிஞரின் பாவேந்தர் பாரதிதாசன் 136 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு சிறப்புரையற்றி, போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளித்தார். தலைமை வணக்கத்திற்குரிய வேந்தர், தகைசால் தமிழர் டாக்டர் கி.வீரமணி சிறப்புரை வழங்கினார். பின்னர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் 3 நாட்கள்தான் உள்ளன. மக்கள் யாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும், யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள். அதனால் இதைப் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. மக்கள் ஆதரவு முழுமையாக ஒரு திசையில் இருக்கிறது, கோட்டைக்கு செல்லும் பாதை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைத்த பாதை நேராக கோட்டைக்குச் செல்லும் பாதை. மக்களின் செல்வாக்கு என்ற பேராதரவோடு அவர் செல்கிறார்.
இதை மக்கள் மனநிலையை பார்த்தே கூறுகிறோம். அந்த உணர்விலேயே செல்கிறோம். மற்றவர்கள் கூறும் கருத்துகள் எல்லாம் வெறும் கனவுகள், கலைய வேண்டிய கனவுகள். அவை விரைவில் கலையும், இவ்வாறு அவர் கூறினார்.
திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமையும் என்ற உறுதியான நம்பிக்கை இருப்பதாக தஞ்சையில் கவிஞர் வைரமுது்து கூறினார்.
கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:- மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்தால் என்ற கேள்விக்குறியை விட அமையப் போகிறது என்று நம்பிக்கையுடன் சொல்லுங்கள். அப்படி சொன்னால் நாங்களும் மகிழ்ச்சி அடைவோம், வாக்குப்பதிவு நடைபெற்ற மறுநாள் அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தேன். அப்போது அவருக்கு பொன்னாடை போர்த்தினேன், பொன்னாடையை விரித்துக்கொண்டே நான் சொன்ன சொல் இப்போதும் என் நாவிலும், செவியிலும் இருக்கின்றன. அப்போது ‘உங்கள் உழைப்பும் சாதனையும் உங்கள் கனவை நனவாக்கும்’ என்று கூறினேன்.
அந்த கனவு நனவாகும் சூழல் உள்ளது. வருகிற 4-ந் தேதி அது உறுதியாகும் என்று நம்புகிறோம். திராவிட மாடல் ஆட்சி நீளும். நீடித்தால், அவர் விட்ட இடத்தில் இருந்து, தொட்ட இடத்தில் இருந்து புதிய சாதனைகளை தொடர்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தமிழ்நாட்டு தாய்மார்கள் தங்கள் நன்றியை காண்பிப்பவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இளங்கலை இரண்டாமாண்டு, கட்டிட எழிற்கலைத் துறை. பு.வி.கியூபா வரவேற்புரை வழங்க, இளங்கலை மூன்றாமாண்டு, அரசியல் அறிவியல் துறை. க.அ.யாழினிசு.அனு இணைப்புரை வழங்க. இளங்கலை இரண்டாமாண்டு, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை. க.தங்கமணி நன்றியுரை.
சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் மாணவர்நிர்வாக மய்யம் & மொழிகள் நிர்வாகக் குழுவினர். பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார்கள்.