கோவை
உடுமலைபேட்டையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா–தம்பி இருவர் அதிக தனித்திறன்களை வெளிப்படுத்தி உலக சாதனை படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்
உடுமலை பேட்டை ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்த டாக்டர் மோகன்ராஜ் – ஹாதி வித்யா தம்பதியரின் மகள் கனிஷா,ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் சிறுவயது முதலே சிலம்பம்,பரதம்,,வீணை இசை,விளையாட்டு,நவீன ஓவியங்கள் வரைதல்,நீச்சல்,மொழி புலமை, என பல்வேறு திறன்களை வளர்த்து கொண்ட கனிஷா தற்போது அனைத்து திறன்களை கொண்ட சாதனை மாணவி என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்..
இதே போல இவரது உடன் பிறந்த சகோதரர் ஹிதேஷ் இதே போல மேற்கத்திய நடனம்,கீ போர்டு இசைப்பது,கராத்தே,கேரம்,ஸ்கேட்டிங் என பல்வேறு துறைகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தி உலக சாதனை புத்தகத்தல் இடம் பிடித்துள்ளார்..
இந்நிலையில் இவர்கள் இருவரது திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக இளவயது சாதனையாளர்கள் என கினெஸ் உலக சாதனை புத்தகம் அங்கீகரித்து அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது இதற்கான விழா பேரூர் ஆதீன வளாகத்தில் நடைபெற்றது..
இதில் கினெஸ் உலக சாதனை புத்தக நிறுவனர் சுரேஷ் ஒருங்கிணைப்பாளர் அனென் ஆகியோர் சாதனையாளர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்..
சிறுவயதிலிருந்தே ஒழுங்கான பயிற்சி, கட்டுப்பாடு மற்றும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்,பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல் ஆகியவை இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்களாகும். தினசரி திட்டமிட்ட பயிற்சியின் மூலம் தங்களது திறமைகளை மேம்படுத்தியதாக கனிஷா,ஹிதேஷ் ஆகியோர் தெரிவித்தனர்…