நீலகிரி
உதகை சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உதகை நகரில் என்டிஏ கூட்டணி கட்சியினருடன் பேரணியாக சென்றார் போஐராஜன் கடந்த முறை குறைந்து வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன் இருந்தாலும் மக்கள் பணியில் சிறப்பாக பணியாற்றுவேன் என நம்பிக்கை வைத்து என்னை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.
தமிழகத்தில் கடந்த மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற முடிந்த நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போஐராஜன் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உதகை ஏடிசி பேருந்து நிலையத்திலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக என்டிஏ கூட்டணி கட்சியினருடன் பேரணியாக சென்றார்.
பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக பணியாற்றிய கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த முறை குறைந்து வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். இருந்தாலும் மக்கள் பணியில் சிறப்பாக பணியாற்றுவேன் என என்மீது நம்பிக்கை வைத்து என்னை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.
உதகை சட்டமன்ற தொகுதிக்கு அளித்த பல்வேறு வாக்குறுதிகளை மத்திய அரசின் அமைச்சர்களின் ஒத்துழைப்புடன் 40, 50 ஆண்டுகளுக்கு முன் நீலகிரி மாவட்டம் உதகை எப்படி பொலிவுடன் இருந்ததோ அப்படியே சிறந்த சுற்றுலா மாவட்டமாக மாற்றுவேன். மக்களின் தேவைகளை நிறைவேற்ற அயராது பாடுபடுவேன் என தெரிவித்தார்.