கரூர் செய்தியாளர் மரியான் பாபு
காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் அதிகபட்சமாக 108 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர்.
மேலும் காங்கிரஸ் சார்பில் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆயினும் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் பெரும்பான்மை யாருக்கும் இல்லாததால் ஆட்சி அமைக்க இயலாத சூழல் உள்ளது.
மேலும் தமிழக கவர்னர் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதை உறுதிப்படுத்தினால் மட்டுமே ஆட்சி அமைக்க தவெக தலைவர் விஜயை அழைக்க முடியும் என கவர்னர் தெரிவித்துள்ளதால் இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில், தவெக தமிழகத்தில் ஆட்சி அமைக்க கூடாது என்ற நோக்குடன் செயல்படும் தமிழக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரமேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாநகராட்சி காங்கிரஸ் உறுப்பினர் ஸ்டீபன் பாபு, கரூர் மாநகர தலைவர் வெங்கடேசன், அரவக்குறிச்சி நகர தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகவும் ஆட்சி அமைக்க அழைக்காத கவர்னரை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.உடன் பட்டியலின பேரவையின் நிறுவன தலைவர் தலித் ஆனந்தராஜ் மற்றும் பேரவையின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.