கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது வால்பாறை தூய இருதய ஆலய பங்கு தந்தை ஜெகன் ஆண்டனி தலைமையில் புனித அந்தோனியார், வேளாங்கண்ணி மாதா, குழந்தை ஏசு ஆகிய சுருவங்கள் தேர் பவனியில் பவனி வந்து அனைவருக்கும் அருளாசி வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் உப்பு மற்றும் மிளகு கலந்து சுருவங்களின் மேல் வீசியும் மலர் மாலைகள் வழங்கியும் தங்களின் நேர்த்திகடன்களுடன் வேண்டிச் சென்றனர்
தேர்பவனி எஸ்டேட் முக்கிய சாலையில் வலம் வந்து ஆலயம் சென்றடைந்தது வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த தேர் திருவிழாவில் பங்கு தந்தை ஹெட்வின், சகோதரர் ரொனால்டு, சகோதரிகள் புனிதா, ஷீலா மற்றும் கோவை டெக்கான் டூல்ஸ் ஹலோசி ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் விழா ஏற்பாடுகளை மைக்கேல் பாபு, வாச்சர் மாரிமுத்து, அமுல் ராஜ், ஜான்சன், ஜெகநாதன், எட்வர்ட், கோவை ஆரோக்கியசாமி, வின்சென்ட், ஒப்பந்ததாரர் வெ.சிவக்குமார் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்த நிலையில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்