பிளஸ் டூ தேர்வில் 595 மார்க் எடுத்த மாணவி பால அனுசியா முதலிடம்.
தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பால அனுசுயா பிளஸ் டூ தேர்வில் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண். ஆங்கிலத்தில் 98 மதிப்பெண். பொருளியல் பாடத்தில் நூறு மதிப்பெண். வணிகவியல் பாடத்தில் 99 மதிப்பெண். வணிக கணிதத்தில் 99 மதிப்பெண். கணக்கப்பதிவியல் பாடத்தில் நூறு மதிப்பெண் மொத்தம் 595 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார் பால அனுஷியா பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் மாரியம்மாள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவி பாலா அனுஷியாவை பாராட்டினார்கள்.