இந்திய அளவில் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பிரீமியம் பரிசுப் பொருட்கள் விற்பனையில் முன்னணி இடம் வகிக்கும் (Momentz) மூமெண்ட்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் துவங்கப்பட்டது.

தமிழகத்தில் முதல் கிளையாக கோவையில் துவங்கப்பட்டுள்ள இதற்கான துவக்க விழா கிளை உரிமையாளர் பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது..

திருமண அழைப்பிதழ்கள், வெள்ளி பரிசுப் பொருட்கள், கார்ப்பரேட் கிப்ட்ஸ், லக்சுரி ஹோம் டெக்கார் மற்றும் தனிப்பட்ட நினைவுப் பரிசுகள் போன்ற பல்வேறு பிரீமியம் சேவைகளின் மூலம் இந்திய அளவில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள இந்த நிறுவனம், தற்போது தனது சேவையை கோவையிலும் விரிவுபடுத்தியுள்ளதாக விழாவில் கலந்து கொண்ட மூமெண்ட்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ.சர்வேஷ் கல்ரா தெரிவித்தார்..

நிகழ்ச்சியில் பேசிய நிர்வாகிகள், ஒவ்வொரு கொண்டாட்டமும் ஒரு உணர்வில் தொடங்குகிறது” என்ற கருத்தை மையமாகக் கொண்டு செயல்படும் மூமெண்ட்ஸ் நிறுவனத்தில் “ஒவ்வொரு பொருளும் மிகுந்த நுணுக்கத்துடன் வடிவமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பரிசும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் சிறப்பு தருணங்களை மறக்க முடியாத நினைவுகளாக மாற்றுவதே எங்கள் நோக்கம்” என தெரிவித்தனர்.

திருமண விழாக்களை கனவுகளுடன் இணைக்கும் வகையிலான பிரம்மாண்ட திருமண அழைப்பிதழ்கள், பாரம்பரியத்தையும் அழகிய வடிவமைப்பையும் இணைக்கும் வெள்ளி கலைப்பொருட்கள், நிறுவனங்களுக்கான உயர்தர பரிசுகள் மற்றும் வீடுகளின் அழகை உயர்த்தும் பிரீமியம் அலங்கார பொருட்கள் ஆகியவை இங்கு இடம்பெற்றுள்ளன.

வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் அனுபவங்களை பரிசுகளின் வாயிலாக உருவாக்குவதே தங்களது நோக்கம் என தெரிவித்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *