தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பேரூராட்சியில் ஜே கே வி எஸ் அறக்கட்டளை,கும்பகோணம் ஹெரிடேஜ் லயன்ஸ் சங்கம்,கும்பகோணம் மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி லியோ சங்கம் ஆகிய நடத்திய இணைந்து இலவச கண், பல் ,ஆயுர்வேதம் மற்றும் பொது மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
முகாமுக்கு ஜே கே வி எஸ் அறக்கட்டளை தலைவர் சேதுராமன்,செயலாளர் நரசிம்மன், மற்றும் கும்பகோணம் ஹெரிடேஜ் லயன்ஸ் சங்கம், தலைவர் அறிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்கள். இதில்ராமதுரை சதீஷ் முருகு திருவள்ளுவன்,ராஜன்
அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் சங்க அனைத்து உறுப்பினர்களும் சேவை செய்தனர்
திருபுவனம்,நலம் பல் மருத்துவமனை மருத்துவா் அரவிந்த் சக்கரவர்த்தி, கும்பகோணம் விஷின் கேர்,கண் மருத்துவமனை மருத்துவர் அரவிந்த்,ஆயுர்வேத மருத்துவர் சுபா,திருபுவனம்,ஸ்ரீ ராஜன், பாலி கிளினிக் அண்ட் கேர் மருத்துவர்கள் சோபன் வெங்கடேஷ்,ஷர்மிளாஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனா். முகாமில் கண் நோய்கள், சா்க்கரை வியாதி, பல், தோல், சம்பந்தமான பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.
“இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
மேலும், கண் நோய் பாதிக்கப்பட்ட நபா்கள் இலவச அறுவைச் சிகிச்சைக்காக கும்பகோணம்அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்