சர்வதேச அலையன்ஸ் கிளப் (Association of Alliance Clubs International) அமைப்பின் புதிய 277 S மாவட்ட நிர்வாக குழு துவக்கம்

ஏ.ஏ.சி.ஐ.(AACI) 277 S மாவட்ட கவர்னராக சந்திர பிரபா பதவியேற்பு

முழுமையாக இந்தியர்களால் வழிநடத்தப்பட்டு செயல்படும் சமூக சேவை அமைப்பான சர்வதேச அலையன்ஸ் கிளப் (Association of Alliance Clubs International) அமைப்பின் புதிய மாவட்டம் 277 S-துவக்க விழா,மற்றும் 2026–2027 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு பதவியேற்பு விழா ராம் நகர் விஜய் பார்க் இன் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..

“சேவை மனப்பான்மையுடன் சமூக முன்னேற்றம்” என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆளுநராக LMF Ally டாக்டர் ஆர். சந்திரபிரபா பொறுப்பேற்றுக் கொண்டார்.

“சந்திரபிரபம் 2026” என பெயரிடப்பட்ட இந்த நிர்வாக குழுவின் முதல் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில், சர்வதேச தலைவர் டாக்டர் பாலகங்காதர சாஸ்திரி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் மேலும், சர்வதேச இயக்குநர் Ally ஸ்ரீனிவாசகிரி பதவியேற்பு அதிகாரியாக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதில் மாவட்ட ஆளுநராக ஆர்.சந்திர பிரபா மற்றும் முதல் துணை ஆளுநர் பிரபு ரங்கசாமி,இரண்டாம் துணை ஆளுனர் ராஜா உட்பட நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர் நிகழ்ச்சியில், ICC மற்றும் IPDG பொறுப்பில் உள்ள பிரியா ஸ்ரீனிவாசகிரி,முன்னிலை வகித்தார்..

முன்னதாக விழாவில் பேசிய ஆர்.சந்திர பிரபா,அலையன்ஸ் கிளப் அமைப்பில் பெண்கள் முன்னேற்றம், இளைஞர் பங்களிப்பு மற்றும் சமூக நலத்திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி செயல்பட உள்ளதாகதெரிவித்தார்..

இந்த நிகழ்ச்சியில் பேசிய நிர்வாகிகள், இந்தியர்களால் உருவாக்கப்பட்டு இந்தியர்களின் சமூக தேவைகளை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த தன்னார்வ அமைப்பு, கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், இரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்களை விரிவாக செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், நகர்ப்புறம் மட்டுமல்லாமல் கிராமப்புற மக்களையும் சென்றடையும் வகையில் சேவைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும், இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்பதே அமைப்பின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு வழங்கப்பட்டதுடன், சமூக நல சேவைகளை மேலும் விரிவுபடுத்த அனைவரும் இணைந்து செயல்பட உறுதி எடுத்துக் கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *