பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாரம்பரிய வீரக்கலை சிலம்ப நிகழ்ச்சி-100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாரம்பரிய வீரக்கலை சிலம்ப கச்சையைக்கட்டு தேர்வு விழா நிகழ்ச்சி பயிற்சியாளர் தினேஷ் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, வேல் கம்பு, போர்ஆயுதங்கள் , தீ பந்தம், ஆகியவற்றிற்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டது இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் கருப்பு பட்டயத்திற்கு தேர்வான மாணவர்களுக்கும் , தகுதி தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் தலைமை பயிற்சியாளர் ஐயப்பன் கலந்துகொண்டு சான்றிதழையும் பதக்கங்களையும் வழங்கி பாராட்டினார்.

விழாவில் பெற்றோர்கள் , பயிற்சியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை மாமன்னர் ராஜராஜ சோழன் பாரம்பரிய வீரக்கலை சிலம்ப குழுவினர்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *