கோவை மருதமலை பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற 25வது வார தூய்மை பணியில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மலைப்பகுதிகளில் தேங்கியிருந்த நெகிழி கழிவுகளை அகற்றினர்.
ரொட்டரி கிளப் ஆப் வடவள்ளி சார்பில் நடைபெற்ற இந்த தூய்மை பணியில் வெள்ளிங்கிரி மலை பாதுகாப்பு இயக்கம்,ஆணி வேர் அமைப்பு,கலாம் பசுமை இயக்கம்,கவுசிகா நீர் கரங்கள்,பனை பாதுகாப்பு இயக்கம், மற்றும் KGF,காக்னிசன்ட் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து செயல்பட்டன.


மருதமலை மலைப்பாதைகள், நடைபயண வழித்தடங்கள் மற்றும் ஓய்வு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி வீசியிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவு பொதிகள், நெகிழி கவர்கள் உள்ளிட்ட கழிவுகள் சேகரிக்கப்பட்டன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நெகிழி பொருட்கள் மலை வளங்களையும் வனவிலங்குகளையும் பாதிக்கக்கூடும் என்பதால், அவற்றை அகற்றும் பணியில் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் எதிர் கால கவர்னர் மாருதி தலைமை விருந்தினராக கலந்து தூய்மை பணிகளை துவக்கி வைத்தார் இதில், ரோட்டரி கிளப் வடவள்ளி தலைவர் சரவணன், ஏ.ஜி.ராஜன் ஆறுமுகம்,, சார்ட்டர் பிரசிடென்ட் மாணிக்க வாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் உறுப்பினர்கள் சதீஷ்,அங்குராஜ்,சந்தோஷ் உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் மேலும் ரோட்டரி கிளை பல்வேறு நிர்வாகிகள் சுவாமி,நாகராஜ்,விஜய்,குர்பிரீத் சிங்,பிரபு,ராமகிருஷ்ணன்,கார்கில் கார்த்திகேயன்,ஜான்,திவாகர்,ஸ்ரீராமுலு,செந்தில்,சைலேஷ்,ஆனந்த் ,ராஜா,ரவி, உட்பட
பலர் கலந்து கொண்டு ஆகியோரும் தூய்மை பணியில் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


“மலைகளை பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு” என்ற கருத்தை பொதுமக்களிடையே எடுத்துரைத்த சமூக ஆர்வலர்கள், மலைப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து இயற்கையை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

சுற்றுச்சூழலை காக்கும் இத்தகைய பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும், இளைஞர்கள் அதிக அளவில் இதில் பங்கேற்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *