திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப்சார்பில்உலகின் முதல் டிஜிட்டல் பல்நோக்கு வட்டு அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். நிறுவனர் நாசர் முன்னிலை வகித்தார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். அஞ்சல் தலை சேகரிப்பாளர் இளம்வழுதி உலகின் முதல் டிஜிட்டல் பல்நோக்கு வட்டு அஞ்சல் தலை குறித்து பேசுகையில்,2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நினைவுகூறும் வகையில், இரண்டு எண்கோண தபால்தலைகள் 2009 ஜனவரியில் வட கொரியாவால் வெளியிடப்பட்டன.

இவை முறையே 300 வோன் மற்றும் 500 வோன் மதிப்புள்ள, இயக்கக்கூடிய இரண்டு டிவிடிக்களைக் கொண்டிருப்பதால், இவை ஒரு அசாதாரணமான தபால்தலையாகும். இந்த டிவிடிக்கள் ஒரு உறையில் இடப்பட்டு, கொரியப் பாடல்களையும் நடனங்களையும் கொண்டுள்ளன.“உலகின் முதல் டிஜிட்டல் பல்நோக்கு வட்டு அஞ்சல் தலை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது உலகின் முதல் டிஜிட்டல் வெர்சடைல் டிஸ்க் (DVD) என்று பிரபலமாக சந்தைப்படுத்தப்பட்டது.இந்த எண்கோண அஞ்சல் முத்திரையில் வட கொரிய விளையாட்டு வீரர்களின் படங்கள், அதிகாரப்பூர்வ பெய்ஜிங் 2008 சின்னங்கள் மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் கொடி ஆகியவை இடம்பெற்றுள்ளன. 2007-ல் வெளியிடப்பட்ட இது, பாரம்பரிய அஞ்சல்தலை சேகரிப்பு மற்றும் அக்காலகட்டத்தின் எண்ணிமத் தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஒரு தனித்துவமான சங்கமத்தைப் பிரதிபலிக்கிறது.அஞ்சல்தலை முக்கியத்துவம்,அசாதாரணமான வடிவம் மற்றும் கருப்பொருளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது விளையாட்டு அஞ்சல்தலை சேகரிப்பாளர்களுக்கு ஒரு தனித்துவமான பொருளாக அமைகிறது.வட கொரியா வட்ட வடிவ குறுந்தகடுகளுடன் இரண்டாவது பதிப்பை வெளியிட்டது.

அதன் உறையின் லேபிளில் இருந்த வாசகம், “உலகின் முதல் குறுந்தகடு காணொளி அஞ்சல் தலை” என மாற்றப்பட்டது.மூன்றாவது பதிப்பு மீண்டும் அசல் எண்கோண வடிவத்திற்கே திரும்பியதுடன், அதன் உறையின் லேபிளில் இருந்த வாசகமும் “உலகின் முதல் குறுவட்டு காணொளி அஞ்சல் தலை” என்றே நீடித்தது என்றார். அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அன்பழக பாண்டியன் முகமது சுபேர் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் முன்னதாக பொருளாளர் தாமோதரன் வரவேற்க, நிறைவாக சிவகுமார் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *